திடீர் பல்டி அடித்த கருணாஸ்.. திமுகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ் என அறிவிப்பு

திமுகவுக்கு அளித்த ஆதரவினை வாபஸ் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை, மார்ச்-9

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை, திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ ஆனார்.

5 வருடங்கள் எம்.எல்.ஏ ஆக இருந்த கருணாஸ், சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

அதேசமயம் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப திமுகவுக்கு ஆதரவு அளிப்பது மற்றும் போட்டியிட தொகுதிகள் கேட்டு அக்கட்சி சார்பில் திமுகவிடம் கடிதமும் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுகவுக்கு அளித்த ஆதரவினை வாபஸ் பெறுவதாகவும், திமுகவுக்கு ஆதரவு மற்றும் தொகுதிகள் கேட்டு தந்த கடிதத்தை திரும்பப் பெறுவதாக முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித் தலைவரும், நடிகருமான கருணாஸ் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *