இந்தியாவில் புதிதாக 15,388 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

டெல்லி, மார்ச்-9

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,12,44,786-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 77 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,57,930-ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 16,596 கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,08,99,394-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானவர்களின் நாடு முழுவதும் தற்போது 1,87,462 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 2 கொடியே 30 லட்சத்து 08,733 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *