குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1500.. ஸ்டாலின் கனவில் மண்ணை அள்ளி போட்ட எடப்பாடி பழனிசாமி

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

சென்னை, மார்ச்-8

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்றார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கூட்டணிப் பேச்சுவார்த்தை முடிந்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்து அறிவிக்கப்படும். வரும் 12-ம் தேதிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்கள், திமுக ஏற்கனவே ரூ.1000 அறிவித்துள்ளனர் என்று கேள்வி ஏழுப்பினர். அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, அதிமுக அறிவிக்க இருப்பது முன்கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்துவிட்டது என்றார்.

அதிமுக அமமுக இணைப்பு இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *