அமமுக கூட்டணியில் ஒவைசி கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கீடு
அமமுக தலைமையிலான கூட்டணியில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, மார்ச்-8

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் அமமுக தலைமையிலான கூட்டணியில் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமமுக கூட்டணியில் ஒவைசியின் கட்சி வாணியம்பாடி , கிருஷ்ணகிரி , சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
புதுச்சேரி பேரவைத் தேர்தலிலும் இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இருகட்சிகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப் மற்றும் தமிழக தலைவர் வக்கீல் அஹமது உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கையெழுத்திட்டுள்ளார்.