திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

சென்னை, மார்ச்-8

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்துவந்த நிலையில் தற்போது உடன்பாடு எட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 இடங்கள் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது திமுக.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் இதுவரை 7 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள், முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவாா்த்தை தொடா்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு உறுதி செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியில் இன்னமும் தமிழக வாழ்வுரிமை மற்றும் கொமதே கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். திமுக கட்சியிடம் தற்போது 180 தொகுதிகள் கைவசம் உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விருப்பம் என்ற உத்தேசப் பட்டியல் நாளை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *