தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வையுங்கள்.. அமித்ஷா

தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும் அமித்ஷா கேட்டுக்கொண்டார். மேலும் பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

குமரி, மார்ச்-8

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ” வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்” என்ற பாஜக பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது சுசீந்திரம் தாணுமலை சுவாமி கோவில் முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா அதிமுக கூட்டணியை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும், பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி மக்கள் பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *