குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார்.

கன்னியாகுமரி, மார்ச்-7

சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை நாகா்கோவில் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கிருந்து காா் மூலம் சுசீந்திரம் வரும் அமித் ஷா, அங்குள்ள தாணுமாலயசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாகா்கோவில் இந்துக் கல்லூரி அருகிலுள்ள நீலவிழி அம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பின்னர் சுசீந்திரத்தில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரம் வழங்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *