மாநிலங்களவை உறுப்பினர் பதவி தர அதிமுக உறுதி.. தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி பேட்டி

முதலில் 41 இடங்கள் கேட்டோம்; தற்போது 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துவிட்டோம் என அதிமுக உடனான தொகுதிப்பங்கீடு குறித்து தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏதுமில்லை, எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தை மட்டுமே உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையும் எனவும் கூறினார்.

சென்னை, மார்ச்-6

அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை ஒன்றும் இல்லை. எங்களுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதிகள் எண்ணிக்கையில் நாங்கள் சற்று இறங்கி வந்துள்ளோம். 41 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் 25 அல்லது அதற்கு மேலான தொகுதிகளாக எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டோம். இன்று 23 தொகுதிகள், 1 மாநிலங்களவை உறுப்பினர் இடம் என சற்று இறங்கி வந்துள்ளோம். இதில் மாநிலங்களவை உறுப்பினர் இடம் வழங்க உறுதியளித்துள்ளார்கள். இந்த எண்ணிக்கை குறித்து தலைவரிடம் கலந்துரையாடவுள்ளோம். அதன்பிறகு, நாளை அல்லது நாளை மறுநாள் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *