மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக.. மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி..!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 57 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்திருந்தார் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா, மார்ச்-6

மேற்கு வங்கத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஆளும் திரிணமூல், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் 57 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக சனிக்கிழமை வெளியிட்டது. இதில் நந்திகிராம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் பாஜகவில் இணைந்தவருமான சுவேந்து அதிகாரி திரிணமூல் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

முன்னதாக 291 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *