தமிழகத்தில் நடப்பது பா.ஜ.க. அரசாம்-சொல்கிறார் ஸ்டாலின்!!!

சென்னை, நவம்பர்-01

தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே, முந்திக்கொண்டு 5 மற்றும் 8ஆம் வகுப்புகளிலும் பொதுத்தேர்வு என்று அறிவித்திருப்பதால் தான், தமிழகத்தில் நடப்பது அதிமுக அரசு அல்ல; பாஜக அரசு என்கிறோம்.

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தாலும், அதை ஆதரிக்கும் அதிமுக ஆட்சி தான், இன்றைக்கு தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக மாறி இருக்கிறது அதிமுக ஆட்சி என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *