பஞ்சாப் சட்டசபையில் அமளி… சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

பஞ்சாப் சட்டப்பேரவையில் முதல்வர் அம்ரீந்தர் சிங்கின் உரையின் போது தொடர் அமளியில் ஈடுபட்டதாக சிரோமணி அகாலிதளத்தின் எம்எல்ஏக்களை பட்ஜெட் கூட்டம் முழுவதும் இடைநீக்கம் செய்து சபைத்தலைவர் உத்தரவிட்டார்.

சண்டிகர், மார்ச்-5

பஞ்சாப் மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தின் போது முதல்வர் அமரீந்தர் சிங் பேசினார்.

அப்போது எதிர்க்கட்சியான சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவையின் மையப்பகுதிக்கு வந்துவிட்டனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் 2 முறை அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. சிரோமணி அகாலி தளம் உறுப்பினர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என சபாநாயகர் ராணா கே.பி.சிங் கேட்டுக்கொண்டார். ஆனாலும் உறுப்பினர்கள் அமைதி காக்கவில்லை. இதையடுத்து சிரோமணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சட்டசபைக் கூட்டத் தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதனையடுத்து அவர்களை அவைக்காவலர்கள் வெளியேற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *