ரமலான் தினத்தன்று நடைபெற இருந்த சிபிஎஸ்இ தேர்வு தேதியில் மாற்றம்.. முழு அட்டவணை.

ரமலான் பண்டிகையின் போது நடைபெறவிருந்த 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை, மார்ச்-5

ரமலான் பண்டிகை மே 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறை முன்கூட்டியோ அல்லது மறுநாளோ தெரியும் நிலையில், ரமலான் பண்டிகை மே 13 அல்லது 15 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட வாய்ப்புள்ளதால், அன்றைய நாள்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு தேதிகளை மாற்றும்படி மத்திய கல்வித் துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று, மே 13 மற்றும் 15 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த 10, 12 வகுப்புத் தேர்வுகள் வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு புதிய தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *