தொகுதிகளை விட லட்சியமே முக்கியம்.. முத்தரசன் பேட்டி
சென்னை, மார்ச்-5

தொகுதிகளின் எண்ணிக்கையை விட லட்சியமே முக்கியமானது என திமுக உடனான தொகுதி பங்கீட்டுக்கு பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “திமுக உடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடைந்துள்ளது. தொகுதியா லட்சியமா என்றால் லட்சியத்திற்கு தான் முதலிடம் கொடுக்கப்படும்” என்றார்.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியல் திமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.