திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை, மார்ச்-5

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அவ்வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

திமுக – இந்திய கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி இழுபறி ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியல் திமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *