அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை..

சென்னை, மார்ச்-5

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மீண்டும் மூன்றாவது முறையாக வெற்றிப்பெறும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 23 தொகுதிகளுக்கு ஒப்பந்தம்போட்டு கூட்டணியை உறுதி செய்துள்ளது. ஆனால் அதே அளவு தொகுதிகள் தனக்கும் வேண்டும் என தேமுதிகவும், அதிக தொகுதிகள் வேண்டும் அதுவும் நாங்கள் சொல்லும் தொகுதிகளையே தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பாஜகவும் நிர்பந்தம் கொடுத்து வருகின்றன.

நேர்க்காணலில் வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதில் நடத்திய அதிமுக தலைமை இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என திடீரென அறிவித்தது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வது, சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஆட்சிமன்ற குழு கூட்டமும் நடைபெறுகிறது. இதையடுத்து தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.

முன்னதாக, நேற்று ஒரே நாளில் விருப்பமனு தாக்கல் செய்த 8 ஆயிரத்து 200 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *