எட்டு வருடங்களுக்குப் பிறகு இணைந்த இயல், இசை!!!

நவம்பர்-01

நீண்ட நாட்களாக பேசாமல் இருந்த இருபெரும் சாதனை ஜாம்பாவான்களான இளையராஜா மற்றும் பாரதிராஜா ஒருவரை ஒருவர் சந்தித்துப்பேசி தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிராஜாவும், இளையராஜாவும் 1980களில் பல்வேறு திரைப்படங்களில் இணைந்து பணிபுரிந்துள்ளனர். மண் வாசனையோடு எடுக்கப்படும் பாரதிராஜாவின் திரைப்படங்களுக்கு, இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. 

சிறு வயது முதலே நண்பர்களாக இருந்த இவர்களுக்குள் 1992ம் ஆண்டு வெளியான நாடோடித் தென்றல் திரைப்படத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் இந்த கூட்டணி விலகியது. இருவரும் பேசிக்கொள்வதையும் தவிர்த்து வந்தனர்.  இந்நிலையில் நீண்ட காலம் பேசாமல் இருந்த இருவரும் இன்று திடீரென சந்தித்து அன்பையும், நட்பையும் பரிமாறிக்கொண்டனர்.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக இருவரும் பேசாமல், சந்திக்காமல் இருந்துள்ளனர். இயலும், இசையும் இணைந்தது, இதயம் என் இதயத்தை தொட்டது என சந்திப்பு குறித்து உணர்ச்சி பொங்க பாரதிராஜா ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். இருபெரும் ஜாம்பாவான்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது தமிழ் சினிமா ரசிகர்களையும், சினிமா நட்சத்திரங்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *