திமுக தான் பாஜகவின் பி டீம்… பழ.கருப்பையா அதிரடி

சென்னை, மார்ச்-4

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழ.கருப்பையா கூறியதாவது;-

”காங்கிரஸ் 7 ஆண்டுகளுக்கு முன்பு இறங்கிய பிறகு மீண்டும் ஏற முடியவில்லையே? இதற்கு யார் காரணம்? 2ஜி தானே காரணம். 2ஜி-க்குத் திமுகதான் காரணம். காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஜெயித்து இனி கோலோச்சப் போவதில்லை. இப்போது தோற்றால் குடிமுழுகிப் போய்விடாது. யானை படுத்தால் குதிரை மட்டம் என்கிற பழமொழிக்கு ஏற்ப காங்கிரஸ் நல்ல கட்சி. மோடியை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மோடி வரக்கூடாது என்று சொல்பவர்கள் எங்களை (மக்கள் நீதி மய்யம்) பி டீம் என்று சொல்கிறார்கள். வாக்குகளைப் பிரிக்கிறவர்கள் பி டீமாம். நாங்கள் பி டீம் அல்ல. நான் சொல்கிறேன். நாங்கள் ஓட்டைப் பிரிக்க வரவில்லை. எங்கள் கருத்துப்படி நாங்கள் இருக்கிறோம். மோடி ஆட்சிக்கு வர யார் காரணம்? உங்களுடைய 2ஜிதான் காரணம். ஆகவே திமுகதான் பி டீம்.

ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும், மக்கள் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கிறார்களே என்று குறை கூறும் கிளைக் கட்சிகள் தலைமை கட்சியிடம் பணம் பெற்றுக்கொண்டு ஊழலுக்கு துணை போகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். மே மாதம் தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்துவோம் என்றால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல் நடத்த வேண்டியது தானே?”

என்று பழ.கருப்பையா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *