ஜெயலலிதா கனவை தினகரனும் நிறைவேற்றுவார்.. அமமுகவுக்கு பாஜக அழைப்பு?
சென்னை, மார்ச்-4

தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியதாவது;-
சசிகலா ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என சசிகலா வேண்டுகோள் வைத்துள்ளார் அதை வரவேற்கிறோம். ஜெயலலிதாவின் கனவு என்ன ஒன்றுபட்ட அதிமுக, முன்னேறிய தமிழகம். பிரதமர் மோடி தலைமையிலான ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான என்டிஏ அணி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றி வருகிறோம். தினகரன் அதிமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்புண்டு. ஆனால் தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என நம்புகிறேன். நேற்று நீங்கள் அனைவரும் சசிகலாவை அதிமுகவில் இணைக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டீர்கள் இன்று என்ன நடந்துள்ளது. நாங்கள் சசிகலாவை விலக நிர்பந்திக்கவில்லை. அனைத்தும் வதந்தி என்பது உண்மையாகியுள்ளது.
நாங்கள் அதிமுகவை உடைக்க நினைப்போமா? ஜெயலலிதாவின் கனவை சிதைக்க நினைப்போமா? எங்கள் முக்கிய நோக்கம் திமுக கூட்டணி வீழ்த்தப்பட வேண்டும், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது முக்கிய நோக்கம். திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்கள் குடும்ப நலனை மட்டுமே யோசிப்பார்கள். அதிமுக வந்தால் தமிழக நலன் குறித்து யோசிப்பார்கள் என சி.டி.ரவி கூறியுள்ளார்.