பாஜகவில் இணைந்த ஒரே வாரத்தில் முதல்வர் வேட்பாளரான ‘மெட்ரோ மேன்’ ஸ்ரீதரன்..!!

கேரள பாஜகவில் இணைந்த 6 நாள்களிலேயே மெட்ரோ மேன் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம், மார்ச்-4

இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்பட்டு வருவபவர் இ.ஸ்ரீதரன். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி கேரள பாஜகவில் இணைந்தார். கேரள மாநிலம் மலப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய் யாத்ராவில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் கட்சியில் இணைந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, நடைபெற உள்ள கேரள சட்டபேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஸ்ரீதரன் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் இன்று வெளியிட்டார்.

‘மக்கள் தங்களுக்கு எது நல்லது, மாநிலத்திற்கு எது நல்லது? என்பதை நன்கு அறிவார்கள். அவர்கள் பாஜகவை ஆட்சிக்கு தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்’ என ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

140 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *