அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.95,380 கோடி!!!

புதுடெல்லி, நவம்பர்-01

நடப்பு நிதியாண்டில் அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.95,380 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைவிட அதிகம் வசூலாகி உள்ளது

அக்டோபர் மாதம் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பான தகவலை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் மொத்தம் 95,380 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகி உள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,582 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.23,674 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.46,517 கோடி ஆகும். செஸ் எனப்படும் கூடுதல் வரி ரூ.7,607 கோடி வசூலாகி உள்ளது. இதில், இறக்குமதி மீதான ரூ.774 கோடி வரியும் அடங்கும். மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் ரூ.2536 கோடி அதிகம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *