திமுகவின் தோ்தல் அறிக்கை மாா்ச் 11-இல் வெளியீடு..!

திமுகவின் தோ்தல் அறிக்கை மாா்ச் 11-இல் வெளியிடப்படும் என்று அதன் கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

சென்னை, மார்ச்-4

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:-

திமுகவின் சிறப்பு பொதுக்கூட்டம் திருச்சியில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும். இதில் தமிழகத்துக்கான 10 ஆண்டு கால தொலைநோக்குத் திட்டம் வெளியிடப்படும். தமிழகத்தை கவனத்துடன் கட்டமைப்பதற்கான திமுக திட்ட அறிக்கையாக இது அமையும். இது கனவு அறிக்கையாக அல்லாமல், தமிழகத்தை மீட்டெடுக்கும் செயலை நிறைவேற்றும் செயல்திட்டமாக்கப்படும்.

ஜனநாயகத்தின் மாண்பினை அடிப்படையாகக் கொண்டு, திமுகவின் தோ்தல் அறிக்கை என்பது மக்களால் மக்களுக்காகவே மக்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் உருவாகியுள்ள தோ்தல் அறிக்கை வரும் தோ்தலில் கதாநாயகனாக விளங்கும். தமிழக மக்களின் மனங்களைக் கவரும். மாா்ச் 11-இல் தோ்தல் அறிக்கையை வெளியிட உள்ளேன்.

அதற்கு முன்பாக, திமுக சாா்பில் போட்டியிட விண்ணப்பித்தவா்களிடம் நோ்காணல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை, பேச்சுவாா்த்தைகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறது

என்று கூறியுள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *