குடியரசுத்தலைவர் முதல் மாநில முதல்வர்கள் வரை.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள்

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தகுதியானவா்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

டெல்லி, மார்ச்-4

இது தொடர்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், தனது மகளுடன் சென்று ராணுவ மருத்துவமனையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவித்தாா். வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசித் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மருத்துவா்கள், செவிலியா்கள் , சுகாதார ஊழியா்கள் ஆகியோருக்கு நன்றி என்றும் அந்தப் பதிவில் அவா் தெரிவித்தாா்.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாா்ச் 1-இல் தொடங்கின. அப்போது, பிரதமா் மோடி டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். அதன் பிறகு குடியரசுத் தலைவா், மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநில முதல்வா் என பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா்.

மார்ச் 3 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
2.தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
3.மத்திய அமைச்சர் அர்ஜூன் மேஹ்வால்
4.மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்
5.கேரள முதல்வர் பினராயி விஜயன்
6.மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் புரி
7.சிக்கிம் ஆளுநர் கங்கா பிரசாத்
8.கோவா முதல்வர் பிரமோத் சாவத்

மார்ச் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
2.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன்
3.மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
4.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
5.மத்திய சிறுபான்மை விவகார அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி
6.தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா
7.மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி

மார்ச் 1 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்:

1.டெல்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு
4.பிகார் முதல்வர் நீதிஸ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *