சசிகலா அரசியலை விட்டு விலக இதுதான் காரணம்.. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி

சென்னை, மார்ச்-4

அரசியலில் இருந்து ஒதுங்குவதாக, ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தார். சசிகலா விலகல் குறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

, “அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.
தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலேயே அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அதை அவரே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். அதனால், அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்குவதால் இனி பின்னடைவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறினால், அனைவரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று நினைத்தார். அதனால் தான் அவ்வாறு கூறினார். தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். யாரும் ஒற்றுமையாக இல்லை என்பதால், அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார். எங்களை அதிமுகவில் இருந்து நீங்கியதால் தான் வேறு கட்சி ஆரம்பித்தோம். அமமுகவில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள்.

அவர் மனதில் உள்ள கருத்தை அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமமுக நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இந்த முடிவு தொண்டர்களுக்கு மட்டும் அல்ல எனக்கும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய கூறினேன். அதற்கு இல்லை என்று கூறிவிட்டார். வாக்கு வங்கி பிரியுமா என்பது குறித்து நான் கூற முடியாது. அமமுக தலைமையில் கூட்டணி அமைப்பது குறித்து பேசி வருகிறோம். 10ம் தேதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கிறோம். விரைவில் எந்ததெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பதை அறிவிப்பேன். முடிவுக்கு வந்த பிறகு தெரிவிப்பேன்.

இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *