நாங்கள் கருவேப்பிலையா? கொத்தமல்லியா?.. ராதிகா ஆவேச பேச்சு

சமத்துவக் கட்சி தலைவர் சரத்குமார் ஆணையிட்டால் சென்னை வேளச்சேரி அல்லது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட தயார் என்று அக்கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலர் நடிகை ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை, மார்ச்-4

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6-ஆவது பொதுக்குழுக் கூட்டம் தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்றது. தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிக்கு சரத்குமார் தவிர வேறு யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யாததால் இரு பதவிக்கும் சரத்குமார் தேர்வு செய்யப்பட்டதாக விழா மேடையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய ராதிகா சரத்குமார், சரத்குமார் எதற்கும் பயப்பட மாட்டார், அன்புக்கு மட்டும்தான் பயப்படுவார், வேறு எதற்கும் பயப்படமாட்டார். இந்தத் தேர்தல் மாற்றத்தினை கொண்டு வரும் தேர்தல் என்று நிச்சயமாக சொல்வேன். வெற்றி என்பது கறிவேப்பலை கொத்தமல்லி கிடையாது. நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி, வேளச்சேரி தொகுதியில் நிற்க வேண்டும் என்று கட்சியினர் சொல்லி வருகின்றனர். நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பேசினார்.
அன்புக்கு மட்டுமே அடிபணிவார் சரத்குமார், இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் தேர்தல் என அடித்துக்கூறுகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *