அதிமுகதான் கூட்டணிக்காக கெஞ்சுகிறது.. எல்.கே.சுதீஷ் பேச்சால் பரபரப்பு..!

கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை. அதிமுக தான் கெஞ்சுகிறது என்ற அக்கட்சியின் எல்.கே.சுதீஷ் பேச்சால் அதிமுக கூட்டணிக்குள் பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆரணி, மார்ச்-3

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், பாஜக மற்றும் தேமுதிக உடன் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பாஜக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை கூட சுமுகமாகதான் நடைபெற்று வருவது போல் தெரிகிறது. ஆனால், தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் செல்கிறது. கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா அல்லது வெளியேறுமா என்று விவாதம் நடைபெறும் அளவில் உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை ஆரணி அருகே நடந்த தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சுதிஷ் “2011 தேர்தலில் நாம் அதிமுக கூட்டணியில் இல்லை எனில் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது. விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் வர தயாராக இருப்பதாக நிறைய கட்சிகள் கூறுகின்றன. மாநிலங்களவை சீட்டுக்காக தேமுதிக ஆசைப்படவில்லை. கூட்டணிக்காக அதிமுகதான் நம்மை கெஞ்சுகிறது; நாம் அவர்களை கெஞ்சவில்லை. என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *