உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லையா?.. திமுக அதிரடி விளக்கம்

சென்னை, மார்ச்-2

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்பது குறித்து திமுக விளக்கமளித்துள்ளது.

கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவைச் சேர்ந்த திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் கே.என்.நேரு இருவரும் கூட்டாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது, “உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது. பிக்பிரதர் என்ற மனப்பான்மையுடன் கூட்டணிக்கட்சிகளுடன் திமுக செயல்படவில்லை. இன்னும் 2 அல்லது 3கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதியாகும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பதை ஸ்டாலின் அறிவிப்பார். தனிச்சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும் கூட்டணிக்கட்சிகளுக்கும் உள்ள பிரச்னை. தேர்தலுக்காகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *