அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 4-ம் தேதி முதல் நேர்காணல்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 4-ம் தேதி முதல் நேர்காணல் நடைபெறும் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-2

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விருப்ப மனு செலுத்திய அனைத்து கழக உடன்பிறப்புகளுக்குமான நேர்காணல், தலைமைக் கழகத்தில் வருகின்ற 4-ந்தேதி (வியாழக்கிழமை)கீழ்க்கண்டவாறு மாவட்ட வாரியாக நடைபெற உள்ளன.

காலை 9 மணி முதல்:- கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, திருநெல்வேலி மாவட்டங்கள்.

தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு மாவட்டங்கள்.

திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி, மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்கள்.

திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்கள்.

புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், நீலகிரி மாவட்டங்கள்.

கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு, திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்கள்.

சேலம் மாநகர், சேலம் புறநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டங்கள்.

பிற்பகல் 3 மணி முதல்:-கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்கள்.

வேலூர் மாநகர், வேலூர் புறநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு மாவட்டங்கள்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு கிழக்கு, செங்கல்பட்டு மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்கள்.

திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மத்தியம், திருவள்ளூர் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்டங்கள்.

வட சென்னை வடக்கு (கிழக்கு), வட சென்னை வடக்கு (மேற்கு), வட சென்னை தெற்கு (கிழக்கு), வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டங்கள்.

தென் சென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு (மேற்கு), தென் சென்னை தெற்கு (கிழக்கு), தென் சென்னை தெற்கு (மேற்கு), சென்னை புறநகர் மாவட்டங்கள்.

புதுச்சேரி மாநிலம், கேரள மாநிலம்.

இந்நேர்காணலில், தொகுதி பற்றிய நிலவரம், வெற்றி வாய்ப்பு பற்றிய நிலவரம் அறிந்திட, தங்களுக்காக விண்ணப்பித்துள்ளவர்கள் மட்டும் விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் தவறாமல் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *