கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தலைவர்கள் விவரம்

கொரோனா தடுப்பூசி போடும் இரண்டாம் கட்டத்தின் முதல் நாளில் பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் திங்கள்கிழமை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்,

டெல்லி, மார்ச்-2

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26 வரை 1.40 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ஆம் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்:

1.டெல்லியில் பிரதமர் மோடி
2.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
3.சென்னையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு
4.பீகார் முதல்வர் நிதிஷ் குமார்
5.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
6.மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர்
7.ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
8.மத்திய அமைச்சர் ஜித்தேந்தர் சிங்
9.தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பாவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *