நமது முதல்வர் விஜயகாந்த்.. எல்.கே சுதீஷின் பேஸ்புக் பதிவால் சலசலப்பு..!

சட்டப்பேரவைத் தேர்தலில் நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என்று தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே. சுதிஷ் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது அதிமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மார்ச்-2

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவிருக்கும் சூழலில் முன்னணி கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் கூட்டணியும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிமுக, தன்னுடன் கூட்டணி அமைத்திருக்கும் பாமகவுக்கு தான் அதிக பட்ச தொகுதிகளை கொடுத்திருக்கிறது. பாமகவுக்கு 23 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவுக்கு 22 தொகுதிகள் கொடுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் தங்களுக்கு பாமகவை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்றும், 30 தொகுதிகள் வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்திவருகிறது.

இதேபோல் தேமுதிகவும் தங்களுக்கு குறைந்தது 25 தொகுதிகள் வேண்டுமென சொல்லி வருகிறது. ஆனால் அதிமுகவோ தேமுதிகவுக்கு அதிகபட்சமாக 12 முதல் 15 இடங்களை கொடுக்க முடிவு செய்துள்ளது. தேமுதிக கேட்கும் எண்ணிக்கைகளை வழங்க அதிமுக மறுப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்கே சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார். அதில், ‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என பதிவிட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.இதனால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *