சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும்.. மல்லை சத்யா பேட்டி
மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அறிவித்துள்ளார்.
சென்னை, மார்ச்-1

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுவது குறித்து திமுக, மதிமுக இடையே இன்று திங்கள்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகுப் பிறகு அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, திமுக, மதிமுக இடையிலான கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். சட்ட பேரவைத் தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில்தான் போட்டியிடும் என்றார்.