அதிமுகவில் விருப்பமனு தாக்கல் செய்வதற்கான கால‍அவகாசம் திடீரென குறைப்பு

அதிமுகவில் விருப்ப மனு அளிக்க மார்ச் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மார்ச் 3 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் போட்டியிட விருப்ப மனு வாங்கியவர்கள் மார்ச் 3 க்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் மார்ச் 3 ஆம் தேதிக்கு பிறகு காலக்கெடு அவகாசம் மீண்டும் நீட்டிக்கப்படாது என அதிமுக சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மார்ச்-1

இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மார்ச் 1) கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல்கள், நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24-02-2021 முதல் அதிமுகவின் சார்பில் வேப்டாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் அதிமுகவினருக்கு விருப்ப மனு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

6-04-2021 அன்று, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல்கள் நடைபெறும் என்று, இந்தியத் தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், அதிமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும், அதிமுகவினருக்கு 03-03-2021 வரை, புதன்கிழமை மட்டுமே விண்னப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இந்த காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்”.

இவ்வாறு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *