அட! இது வெளிநாடு இல்லை.. கொங்குச்சீமை கோவைதான்.. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்வீட்!

கோவை, மார்ச்-1

கோவை ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நிறைவுற்று சமீபத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரி சாலையில் பாதசாரிகள் நடைபாதை, அலங்கார தெருவிளக்குகள், ஒளிரும் விளம்பர பலகைகள, செல்பி பாய்ண்ட், பிரிட்டிஷ் கோபுர கடிகாரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. நாள்தோறும் இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி சாலை புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘ இது ஏதோ வெளிநாடு என்று நினைத்துவிடாதீர்கள். இது நம் தமிழகத்தின் கொங்குச்சீமை கோவையே தான்!

வாக்களித்த மக்களுக்கு மனசாட்சியுடன் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு, பல்வேறு மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று தான் #SmartCity திட்டத்தின் கீழ் அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு அண்மையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அர்பணிக்கப்பட்ட #கோவை ஆர்.எஸ். புரம் மாதிரி சாலைகள், பிரிட்டிஷ் கோபுர கடிகாரம் உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் இவை.

பொதுமக்கள் மகிழ்சியுடன் இவற்றை பயன்படுத்தி வருவது மிகுந்த மன நிறைவை அளிக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *