2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்.. அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ள முன்னாள் அதிபர் டிரம்ப், தனி கட்சி தொடங்க இருப்பதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், மார்ச்-1

அமெரிக்க அதிபர் தேர்தல் தோல்விக்கு பிறகு தலைநகர் வாஷிங்டனில் முதன்முறையாக பொது மேடையில் பேசிய டொனால்டு டிரம்ப் கூறியதாவது;-

2024- ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம். பைடன் நிர்வாகம் மோசமாக இருக்கப்போகிறது என்பது நமக்கு தெரியும். ஆனால், எந்த அளவு மோசமாக இருக்கப்போகிறது என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. 2024 அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி படுதோல்வியை சந்திக்கும்.

குடியரசு கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார். தனிக்கட்சியை தொடங்கி அமெரிக்க மக்களின் வாக்குகளை பிரிக்கும் எண்ணம் எப்போதும் ஏற்பட்டது இல்லை.

இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *