குடும்ப ஆட்சி தேவையா? மக்களுக்கான ஆட்சி தேவையா? – தெறிக்க விட்ட அமித்ஷா

விழுப்புரம், மார்ச்-1

தமிழகம் வந்த அமித்ஷா விழுப்புரத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

நாட்டின் தொன்மையான மொழி தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. திருவள்ளுவரை பற்றிய அறியவும், தமிழில் பேசவும் விருப்பம் என பிரதமரும் தெரிவித்துள்ளார். தமிழ் மண்ணில் பிறந்த பல மகான்கள், உலகளவில் பெருமையை சேர்த்தவர்கள்.

நாட்டில் 13 கோடி தாய்மார்களுக்கு பாஜக அரசு சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளது. எந்த வீடும் மின் இணைப்பு இல்லாமல் இல்லை என்ற சாதனையை பாஜக செய்துள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் 2022 ஆண்டுக்குள் கழிவறைகொடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஏழை மக்களுக்கு மருத்துவ வசதி ஏற்படுத்த ஆண்டுக்கு ரூ 5 லட்சம் செல்வு செய்ய பாஜக முயன்றுவருகிறது.

சுதந்திர இந்தியாவில் சுத்தமான குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுவருகிறது. படடியல் சமுதாய மகளுக்கு ரூ.59 கோடி கல்வி உதவித்தொகை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவருகிறது.

தலித், ஏழை எளியோரைப்பற்றி யோசிக்கும் போது எம்ஜிஆர் சத்துணவு கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தினார்.

நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை தாக்கியுள்ளோம். பாதுகாப்பு, பொருளாதாரத்தை உயர்த்த பாஜக கூட்டணி பாடுபடுகிறது.

திமுகவும் காங்கிரஸூம் தங்கள் குடும்பத்தினர் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது.சோனியா காந்திக்கு ராகுல்காந்தி மீது கவலை, ஸ்டாலினுக்கு உதயநிதி மீது கவலை .திமுக ஊழலைப்பற்றி பேசும் போது சிரிப்பு வருகிறது. 2 ஜி ஊழல் செய்தது யார் என திரும்பிப் பார்க்கவேண்டும்.

ரூ.12 லட்சம் கோடி ஊழைல் நடைபெற்றபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. 2ஜி, 3,ஜி , 4 ஜி எல்லாம் தமிழகத்தில் உள்ளது. எல்லாமே திமுக, காங்கிரஸ் கட்சி குடும்பத்தில் உள்ளது. திமுகவில் 3, காங்கிரஸில் 4 குடும்பத்தினர் ஆட்சியில் உள்ளனர். 2ஜி என்றால் மாறன். 3 ஜி என்றால் கருணாநிதி 4 ஜி என்றால் நேரு குடும்பத்தினர்.

தமிழ் கலாச்சாரம் பற்றி இவர்கள் பேசுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழியைக் கொண்டுவந்துள்ளோம். காங்கிரஸ் காரர்கள் இந்தாலிய மொழி என்ன மொழி என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ராகுல்காந்தி வருகிறார். ஆனால் அதற்கு தடை விதித்து காங்கிரஸ் அரசு. தற்போது தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை பாஜக கொண்டுவந்துள்ளது.

தமிழக அரசுக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா காலத்தில் சிறப்பான நிர்வாகம் செய்தது. நல்லாட்சிக்கான விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. நீர் மேலாண்மையில் அனைத்து மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டது.

நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தமிழக சாலைகளை மேல்படுத்த ரூ 1 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்குக்கு ரூ 63 கோடி தரப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களுக்கு 33 கோடி தரப்படுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு ரூ5ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா திட்டத்திற்கு நபார்டு மூலம் ரூ30 ஆயிரம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது. 2019 முதல் மீனவர் மேம்பாட்டிற்கான திட்டத்தில் அதிக பலன் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. இதுவரை ரூ545 கோடி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது . ரூ20 ஆயிரம் கோடி செலவில் சர்வதேச எல்லையில் மீன் பிடிப்போருக்கு கட்டமைப்பு ஏற்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ1, 764 கோடி ஒதுக்கிட்ப்பட்டுள்லது. இ சி ஆர் சாலை மேம்பாட்டிற்கு ரூ 13,797 கோடி ஒதுக்கீடு. சென்னை- மதுரை தேஜஸ் ரயில் கொண்டுவரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம் ஜி ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் விரைவில் நல்ல முடிவெடுக்க வேண்டிய சூழலில் உள்ளனர். உங்களுக்கு மக்களுக்கான ஆட்சி தேவையா? குடும்ப ஆட்சி தேவையா என்பதை முடிவெடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *