மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.. அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சென்னை, மார்ச்-1

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனின் வீட்டிற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவிய பின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். அங்கு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 

இதனிடையே ஸ்டாலின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *