தேமுதிக தலைவர் விஜயகாந்த்துடன் அமைச்சர்கள் சந்திப்பு..!
தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, கூட்டணியை உறுதி செய்வதில் அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாமகவுடனான தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி சந்தித்துள்ளனர்.