மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் பழ. கருப்பையா.. தேர்தலில் போட்டியிடுவார் என கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழ.கருப்பையா இணைந்தார். திமுகவிலிருந்து விலகி இருந்த நிலையில் இன்று கமல் முன்னிலையில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவருடன் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகமும் இணைந்தார்.

சென்னை, பிப்-27

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா இணைந்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார்
சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். மார்ச் 1-ந்தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். பொன்ராஜ், ரங்கராஜ், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் அய்யர் ஆகியோர் நேர்காணலை நடத்துகின்றனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந்தேதி வெளியாகும். மார்ச் 3-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *