திமுக வேட்பாளர் நேர்காணல் மார்ச் 2-ந்தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு மார்ச் 2 முதல் 6 வரை நேர்காணல் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

சென்னை, பிப்-27

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் செலுத்தியவர்களை கழகத் தலைவர் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை, பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

குறிப்பிட்டுள்ள தேதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர், பொறுப்பாளர்கள் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிக் கழகச் செயலாளர்கள் வர வேண்டிய அவசியமில்லை. வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களை எல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு- கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய, தென்காசி வடக்கு, தெற்கு, ராமநாதபுரம்.

மாலை 4 மணிக்கு- விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, தேனி வடக்கு, தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, மேற்கு.

மார்ச் 3-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு- மதுரை வடக்கு, தெற்கு, மதுரை மாநகர் வடக்கு, தெற்கு, நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு.

மாலை 4 மணிக்கு- திருப்பூர் மத்திய, வடக்கு, திருப்பூர் கிழக்கு, தெற்கு, கோவை கிழக்கு, வடக்கு, தெற்கு, கோவை மாநகர் கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு.

மார்ச் 4-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு- தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு, மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய, புதுக்கோட்டை வடக்கு, தெற்கு.

மாலை 4 மணிக்கு- கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி வடக்கு, மத்திய, தெற்கு, திருவாரூர், நாகை வடக்கு, தெற்கு.

மார்ச் 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு- தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய, கடலூர் கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு, விழுப்புரம் வடக்கு, மத்திய.

மாலை 4 மணிக்கு- திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, வேலூர் கிழக்கு, மேற்கு, மத்திய, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு.

மார்ச் 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு- திருவள்ளூர் கிழக்கு, மத்திய, மேற்கு, சென்னை வடக்கு, வடகிழக்கு, சென்னை கிழக்கு, தெற்கு, சென்னை மேற்கு, தென்மேற்கு.

மாலை 4 மணிக்கு- புதுச்சேரி, காரைக்கால்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *