புதிய கட்சி தொடங்கிய அர்ஜூன மூர்த்தி.. ரஜினிகாந்த் வாழ்த்து
‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, பிப்-27

அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்த ரஜினிகாந்த தனது கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை அறிமுகப்படுத்தினார். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். இதனிடையே, அர்ஜுன மூர்த்தி இன்று (பிப்.27) புதிய கட்சியை தொடங்கினார். ‘இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், இன்று தனி அரசியல் கட்சித் தொடங்கி இருக்கும் அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.