தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, செப்டம்பர்-6

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம், திருச்சி, பெரம்பலூர் அரியலூர், தஞ்சை, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும்,  திண்டுக்கல், நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடல் மற்றும் தென் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.


கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஒமலூர், நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *