தமிழகத்தில் 3வது கூட்டணி உருவாகிறதா?.. கமலுடன் சரத்குமார் சந்திப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார்.

சென்னை, பிப்-27

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது.இதைத்தொடர்ந்து சமத்துவமக்கள் கட்சி ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை சரத்குமார் நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். சரத்குமாருடன் ஐஜேகே துணை பொதுச்செயலாளர் ரவிபாபு உடன் இருந்தார்.


இச்சந்திப்பின் போது சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக சரத்குமாரும் கமல்ஹாசனும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால், மூன்றாவது கூட்டணி தமிழகத்தில் ஏற்படலாம் என்கிற சூழல் உருவாகி இருக்கிறது. மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *