அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.

சென்னை, நவம்பர்-01

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 8-ம் தேதி சென்னையில் இருந்து அமெரிக்க புறப்படும் பன்னீர்செல்வம் 10 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். சிகாகோ, வாஷிங்டன், ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஓ.பி.எஸ். ஆய்வு செய்கிறார். துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் செல்லவுள்ளார். மிக சமீபத்தில் தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *