தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்.. மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று நடக்க உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-26

தமிழகத்தில் மே 24-ம் தேதியுடன் ஆட்சி முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வந்தது. ஐந்து மாநிலங்களிலும் பலகட்டமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் இன்று ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.

அதன்படி தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி அன்று தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

வேட்பு மனு தாக்கல் தேதி: மார்ச் 10

வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: மார்ச் 19

வேட்புமனு பரிசீலனை: மார்ச் 20

வேட்புமனு திரும்பப் பெற இறுதித் தேதி: மார்ச் 22

வாக்குப்பதிவு: ஏப்ரல் 6

வாக்கு எண்ணிக்கை: மே 2

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் .தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வேட்புமனுத் தாக்கலின்போது இருவர் மட்டுமே உடன் இருக்கலாம் , வேட்புமனுவை இதுவரை நேரில் மட்டுமே தாக்கல் செய்து வந்த நிலையில் ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம் என முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சுனில் அரோரா அறிவித்தார்.

தமிழத்தின் சிறப்பு தேர்தல் பார்வையாளராக தேவேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இதனிடையே, தமிழகத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். தற்போது துணை ராணுவம் 45 கம்பெனி படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *