80 வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும் முறை வாய்ப்பாக அளிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

டெல்லி, பிப்-26

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஞ்சல் முறையில் வாக்களிக்கும்முறை ஒரு வாய்ப்பாக வழங்கப்படும். விருப்பம் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே அஞ்சல் முறையில் வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *