பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..! வைரலாகும் புகைப்படம்

இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

கோவை, பிப்-26

அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கோவை வந்தார். அப்போது, இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 105 வயதான பாப்பம்மாள் என்ற மூதாட்டி, கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்து உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்து வருகிறார். அவசரமான உலகில், துரித உணவுகளை உண்டு வியாதிகளுக்கு உள்ளாகும் மனிதகுலத்தில், இயற்கை விவசாயம் செய்து 105 வயதிலும் ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது மத்திய அரசு.

அந்த 105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி. பாப்பம்மாள் பாட்டியின் கைகளை பிடித்து பணிவுடன் வணங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அந்த சந்திப்பு குறித்த மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்த, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *