திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும்.. துரைமுருகன் அறிவிப்பு

திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7ம் தேதி நடைபெறும் என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை, பிப்-25

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 7-3-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம், சென்னை, கொட்டிவாக்கம், பழைய மாமல்லபுரம் (OMR) சாலை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில் நடைபெறும். அதுபோது பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *