தடைகளை தாண்டி தணிக்கை சான்றிதழ் பெற்ற ”ஜிப்ஸி”

சென்னை, நவம்பர்-01

நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குனரும் எழுத்தாளருமான ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகிய படம் ஜிப்ஸி. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியான நாள் முதலே பல பல விமர்சனங்களை பெற்றது. மேலும், அதிலிருந்து வெளியான ஒரு பாடலின் வரிகள் சமூகப்பிரச்சனைகளை எடுத்துகூறும் விதமாக இருந்தது. இதனால், பலரும் ஜிப்ஸிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த படத்தினை பார்த்த தணிக்கை உறுப்பினர்கள், ஒருசில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியதை இயக்குனர் ஏற்கவில்லை. இதனையடுத்து டெல்லியில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் டெல்லி தணிக்கை குழுவினர் இந்தப் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்தப் படத்தின் திரையுடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *