“அதிமுகவை மீட்போம்; டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும்” – அமமுக பொதுக்குழு தீர்மானம்

அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் எனவும் அமமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை, பிப்-25

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் அ.ம.மு.க, பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் துணைத் தலைவர் அன்பழகன் தலைமையில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.
இதில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்றுள்ளார். அதேபோல் மொத்தம் 10 இடங்களில் காணொளி காட்சி மூலம் இந்த செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது அதிமுகவை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும். டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும். கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பான அனைத்து விஷயங்களிலும் முடிவெடுக்க டிடிவி தினகரனுக்கு அதிகாரம், 7 பேர் விடுதலை செய்ய மத்திய மாநில அரசு முடிவு எடுக்க வேண்டும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை குறைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *