சிறந்த சுயஉதவி குழுக்களுக்கு விருது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவிப்பு

சென்னை, பிப்.24

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்-23) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 30 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் மற்றும் 11 பாலங்கள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மாவட்ட அளவில் கிராமங்களுக்குத் தேவையான அனைத்து வளர்ச்சிப்பணிகளை செயல்படுத்தும் அலகாகவும், ஒன்றிய அளவில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ளும் அலுவலகமாகவும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை விளங்குகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள் போதிய இடவசதி இல்லாமல் சிறிய கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

அதனைக் கருத்தில் கொண்டு, 2017–-2018 மற்றும் 2018–-19–ம் ஆண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அலுவலகங்களை ஒருங்கிணைத்து, விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகங்கள் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், 28,716 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 28,716 சதுர அடி கட்டட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்துடன் 6 கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம்;

கல்பூண்டி ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், கல்பூண்டி ஊராட்சி, கல்பூண்டி லாடப்பாடி சாலையில் கமண்டல நாகநதியின் குறுக்கே 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஊராட்சி ஒன்றியம், கப்பூர் ஊராட்சி, வள்ளவராயன் குப்பம் சாலையில், வீரசோழன் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், கொத்தங்குடி ஊராட்சி, கொத்தங்குடி சித்தாய்மூர் சாலையில் வீரசோழன் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; சித்தாய்மூர் ஊராட்சி, சித்தாய்மூர் – கீரம்பேர் சாலையில் அரிச்சந்திரா ஆற்றின் குறுக்கே 2 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; வெள்ளப்பள்ளம் ஊராட்சி, வெள்ளப்பள்ளம் – நாலுவேதபதி சாலையில் நல்லாற்றின் குறுக்கே 2 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் ஊராட்சி, ஆதனூர் ஊராட்சி சாலையில் மாணங்கொண்டான் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; கரியாப்பட்டினம் ஊராட்சி, செம்பியமணக்குடி கரியாப்பட்டினம் – செண்பகராயநல்லூர் சாலையில் மனக்காட்டான் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி

நாகக்குடையான் ஊராட்சி, நாகக்குடையான் – கள்ளிமேடு சாலையில் ஈரவாய்க்கால் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்; பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி, நடேசதேவர் கடையடி – பஞ்சநதிக்குளம் கிழக்கு சாலையில் மாணங்கொண்டான் ஆற்றின் குறுக்கே 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி, மருதூர் தெற்கு – பஞ்சநதிக்குளம் மேற்கு சாலையில் மாணங்கொண்டான் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் தகட்டூர் ஊராட்சி, தகட்டூர் – சூரியன்காடு சாலையில் முள்ளி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

என மொத்தம் 36 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் பாலங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

சுயஉதவிக் குழுக்களுக்கிடையே சிறந்த நிர்வாகம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுடன் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும், சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருதுடன் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

சுய உதவிக்குழுக்களுக்கு விருது

அந்த வகையில், 2013–-14 முதல் 2016–-17ஆம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான சிறந்த சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான விருதுகளை கீழ்க்காணும் 8 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 4 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு முதலமைச்சர் வழங்கினார்.

மாநில அளவில் சிறந்த சுய உதவிக் குழுக்கள் விபரம் வருமாறு:–

2013–-14–ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் அன்னை சுய உதவிக் குழு

2013–-14–ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஜான்சிராணி மகளிர் மன்றம்

2014–-15–ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் மயில் சுய உதவிக் குழு

2014–-15–ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் பூவிதழ்கள் சுய உதவிக் குழு

2015–-16–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் இளந்தென்றல் சுய உதவிக் குழு

2015–-16 –ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குப்பிச்சிபாளையம் மகளிர் முன்னேற்ற சுய உதவிக்குழு

2016–-17–ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் ஜீவக்கல் விழிகள் சுய உதவிக் குழு

2016–-17–ம் ஆண்டு மதுரை மாவட்டம் முனியாண்டி சுய உதவிக் குழு

சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு விபரம் வருமாறு:–

2013–-14–ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கக்குச்சி ஊராட்சி

2014–-15–ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கட்டாளங்குளம் ஊராட்சி

2015–-16 –ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் காளகஸ்தினாதபுரம் ஊராட்சி

2016–-17 –ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் நா.கெங்கபட்டு ஊராட்சி

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கதர் மற்றும் கிராம தொழில் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜெ.யு.சந்திரகலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *