புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் பதவியேற்பு!!!

புதுச்சேரி, நவம்பர்-01

புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். காமராஜ்நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்திலிங்கம், மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இதனால் காலியாக இருந்த காமராஜ் நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜான்குமார் வெற்றிபெற்றார். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் ஜான்குமார் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.  புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஜான்குமாருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *